தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு – தேர்தல்கள் ஆணையாளர்!
Sunday, September 1st, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நீதிமன்றத்திலிருந்து உத்தரவொன்று கிடைக்க பெற்றால் அதனை நடத்தவேண்டி நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்த கூடிய சட்டம் என்ன என்பது தொடர்பிலான உரிய தீர்வு இன்னும் கிடைக்க பெறவில்லை. அதன் காரணமாக அதனை நடத்த முடியாது என்றே கூற வேண்டியுள்ளது.
எனினும் அதனை நடத்துமாறு உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
வேலணை பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவிப்பொருட்கள் கையளிப்பு!
சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை - அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அப...
தேர்தல் வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பம் அவசியமன்று - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


