தேசிய பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன்- ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!

இல்லாது செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பை தமது ஆட்சியின்கீழ் மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி – வத்துகாமம் நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தீவிரவாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், மீண்டும் அது உருவாகமல் இருக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், முப்படையினர், காவல்துறை, புலனாய்வுத்துறை, பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு என்பனவற்றை அரசியல் எதிர்த்தரப்பினர்களின் பின்னால் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.
இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதற்கு சர்வதேசத்திடம் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறான நிலையில், அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு வழங்கி, மீண்டும் பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கால திட்டம் மற்றும் கொள்கை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ கூறுயதையே தானும் கூறுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தந்தையின் வழியில் செல்லவுள்ளதாக ஒருவர் கூறுகின்றார். கண்டியில் 157 பேர் படுகொலை செய்யப்பட்டது அவரின் தந்தையின் காலத்தில்தான் இடம்பெற்றது. இவ்வாறான நிலையில், எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|