200 மில்லியன் டொலரை இலங்கை செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் – பங்களாதேஷ் நம்பிக்கை!

Monday, February 6th, 2023

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தநிலையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு செப்டம்பர் வரையில், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் அதிதியாக கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பிய மோமன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட இந்த 200 மில்லியன் டொலர் கடனை கடந்த மார்ச் மாதம் 200 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.

எனினும், இலங்கை மேலும் கால அவகாசம் கோரியதை அடுத்தே பங்களாதேஷ் மத்திய வங்கி இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: