தாதியர்கள் தொடர்பில் புதிய திட்டம் – கோட்டாபய ராஜபக்ஷ!
Wednesday, September 4th, 2019
உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தாதியர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளை இந்நாட்டு தாதியர்களுக்கும் பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடனான சந்திப்பில் இதனை தெரிவித்திருந்தார்.
தாதியர்களுக்கு வழங்கப்படும் தொழில் குறித்த அறிவு புதுப்பிக்கப்படாமை தாதியர்களின் தொழில் துறைக்கும் , நோயாளர்களின் உயிருக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, கூடிய விரைவில் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
யாசகம் கேட்க முடியாது முற்றாகத் தடை!
உயர்தரம், புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்தவாரம் அறிவிப்பு - பரீட்சைகள் திணைக்களம்!
வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று - முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர் பாதிப்பு!
|
|
|


