முன் அறிவித்தலின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு!
Tuesday, March 7th, 2017
பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி 1Kg இனது விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை நிலையங்களில் தேடிப் பார்த்தமைக்கு அமைய, சீனியின் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக, சீனி 1Kg இற்கான மொத்த விற்பனை விலை, 93 – 95 ரூபாயிலிருந்து 105 ரூபாயாக அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு!
டெங்கு நோயாளர்களின் வீதத்தில் பாரிய அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது – இல்லையே...
|
|
|


