யாசகம் கேட்க முடியாது முற்றாகத்  தடை!

Tuesday, January 2nd, 2018

கொழும்பில் எவருக்கும் யாசகம் கேட்க முடியாது மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் பஸ் தரிப்பிடங்கள், பஸ்கள், சமிக்ஞை கட்டமைப்புகளுக்கு அருகில் என பல இடங்களில் யாசகர்களை இன்றும் காண முடிந்தது.

இவ்வாறு யாசகத்தில் ஈடுபடுவோரில் பலர் முகவர் ஒருவரின் கீழ் செயற்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. அங்கவீனமானவர்கள், குழந்தைகளைப் பயன்படுத்தி இவ்வாறு யாசகம் பெறப்படுவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் பராமரிப்பற்று கைவிடப்பட்டவர்களும் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கொழும்பில் வறுமைக்கோட்டின் கீழ் யாசகம் கேட்கும் நிலையில் சுமார் 600 பேர் மாத்திரமே உள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலி தேவராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts: