தரம் 5 : பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம்!
Wednesday, January 8th, 2020
ஐந்தாம் தர புலமைப் பரீட்சை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மீள்பரிசீலனைகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெறுபேறுகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.
மீள்பரிசீலனைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னரான பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தித்திற்குள் பிரேவேசித்து சரியான பரீட்சை சுட்டெண்ணை பதிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
Related posts:
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி!
உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் ஆரம்பம்!
அரச இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்!
|
|
|


