தபால் மூல வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல் ஆணைக்குழு!

Wednesday, October 16th, 2019


2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை வெளியிடுதல் அடையாளம் இடுதல் மற்றும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகித்தல் ஆகியவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் நேற்று (15) இடம்பெற்றதுடன் தபால் மூல வாக்குச் சீட்டுகளை வெளியிடுதல் மற்றும் அவற்றை தபால் மூலம் அனுப்பி வைப்பதற்காக கையளிக்கும் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேபோல் அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் அலுவலக உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் தபால் மூல வாக்களிப்புகளில் கலந்துக்கொள்ள தவறுவோருக்கு எதிர்வரும் எழாம் திகதி அந்தந்த மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சலுக்காக கையளிக்கும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 03.11.2011 அன்று ஆரம்பித்து 09.09.2016 அன்று நிறைவடையவுள்ளது.

அதேபோல் 09 ஆம் திகதிவரை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்க பெறாத அஞ்சல் வாக்காளர்கள் தனது அடையாளத்தை தேர்தல் பதிவேட்டில் பதிவு செய்துள்ள தபால் நிலையத்தில் பதிவுசெய்த பின்னர் உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டைப் பெறலாம் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts: