ஜனாதிபதி தேர்தல்: 14 வேட்பாளர்கள் களத்தில் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, September 7th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 14 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தனியான வேட்பாளர்களை நியமிக்கவுள்ளதாக 12 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அறிவித்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சுயாதீனமாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான முழுமையான திட்டங்களை மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கமைய அவர்கள் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மாகாணசபைத் தலைமையின் ஆளுமை கேள்விக்குறி!
மருத்துவமனைகளின் அபிவிருத்திக்குத் புதிய திட்டம் - சுகாதரத்திணைக்களம் !
எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும்...
|
|
|


