மருத்துவமனைகளின் அபிவிருத்திக்குத் புதிய திட்டம் – சுகாதரத்திணைக்களம் !

Friday, April 12th, 2019

வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளை அபிவிருத்தி செய்யும் சிறப்பான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் பல்வேறு பிரதேச மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகள் பிரதேச மட்டத்தில் அந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டன.

ஆனால் மக்கள் தற்போது மருத்துவத் தேவைகளுக்காக மாவட்ட மருத்துவ மனைகளை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் காணப்படும் மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகள் இன்மையே இதற்குக் காரணம். இதனால் என்ன நோய் என்றாலும் மாவட்ட மருத்துவ மனைகளை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி மற்றும் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் பிரதேச ஆரம்ப மருத்தவ மனைகள் சீரமைக்கப்படவுள்ளன.

மருத்துவ மனைகளின் ஆய்வு கூட வசதிகள், வெளிநோயாளர் பிரிவு, முதல் உதவிச் சிகிச்சைப் பிரிவு, தேவையான கட்டட வசதிகள் என்பன இதன் மூலம் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. இது 5 வருடங்களைக் கொண்ட தொடர்ச்சியான வேலை திட்டமாகும். வேலைகளைப் பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பவுள்ளன. இந்த வருடம் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அச்சுவேலி மற்றும் கோப்பாய் பிரதேச மருத்துவமனைகள் சீரமைக்கப்படவுள்ளன. என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: