சுதந்திர கட்சியின் ஆதரவு கோத்தாவுக்கு: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Wednesday, October 9th, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது.
கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிமால் சிறிபால டி சில்வா, சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் - பாடசாலை மாணவர்கள் உட்பட 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்...
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க மத்திய வங்கி புதிய ஏற்பாடு!
|
|
|


