கொழும்பில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை!

Saturday, August 17th, 2019


கொழும்பு நகரில் வீடுகளில் கொட்டப்படும் குப்பைகளுக்கு கட்டணம் ஒன்றை அறவிடும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையை மேற்கோள்ட காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  

அத்துடன் இந்த யோசனை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நகர சபை ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார். நகரின் ஹோட்டல் மற்றும் கட்டட திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அனைத்து இடங்களிலும் கட்டணம் அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குப்பை வாளி ஒன்றிற்கு தற்போது 100 ரூபாய் அறவிடப்படுவதாகவும், வீடுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட குப்பைகளின் அளவுக்கு அமைய கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது கொழும்பு நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், புத்தளம் அருவக்காலு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டப்படுகின்றது. அதன் பராமரிப்பிற்காக இந்த பணம் அறவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் முதல் கழிவு போக்குவரத்திற்காக அரச செலவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: