கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விஷேட சந்திப்பு!
Monday, October 21st, 2019
அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நாளை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
நாளை (22) காலை 10 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது சந்திப்பு இதுவாகும். இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி தொடர்பில் முறையான வேலைத் திட்டம் அவசியம்!
2 வயது குழந்தைகளை கொண்ட தாய்மார்ளுக்கு வெளிநாட்டு தொழில் இல்லை – வெளியானது புதிய சுற்றறிக்கை!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிசாரக்க 5000 ரூபா கொடுப்பனவு - பொலிஸ் போக்க...
|
|
|


