முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி தொடர்பில் முறையான வேலைத் திட்டம் அவசியம்!

Saturday, July 8th, 2017

சிறுபராய மத்திய நிலையங்கள் தற்சமயம் சுயதொழிலை இலக்காகக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளாக மாறியிருப்பதாக என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான முறையான வேலைத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக தனிநபர்  பிரேரணையை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிளார்.

சகல வசதிகளையும் கொண்ட பெண் பராமரிப்பாளர்களுடன் கூடிய சிறுபராய அபிவிருத்தி மத்திய நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

முன்பள்ளி கல்வியை மேம்படுத்தவதற்காக முறையான வேலைத் திட்டமும் அவசியமாகும். நாட்டின் அதிகளவிலான சிறுபராய அபிவிருத்தி நிலையங்கள் காணப்பட்டாலும் இவை தராரதரம் இன்றி முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

Related posts: