முதன்முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா விண்கலம்!

Tuesday, April 16th, 2019

இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் நாளையதினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான நடடிக்கைள் பூர்த்திய அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளையதினம் ராவணா செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் முதன்முறையாக செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related posts: