உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
Saturday, August 17th, 2019
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நேற்றைய தினம் வீழ்ச்சி மாற்றம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஒரு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1523 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 11ஆம் திகதி உலக சந்தையில் தங்கத்தின் விலையில் கடுமையாக அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த 6 வருடங்களில் இதுவே தங்கத்தின் உச்சகட்ட விலை அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Related posts:
மீண்டும் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்!
தொடருந்து சேவை பாதிப்பு!
காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி!
|
|
|


