தொடருந்து சேவை பாதிப்பு!
Monday, December 24th, 2018
தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடருந்து மூலமான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பொதிப்பரிமாற்றல் நடவடிக்கையின் போது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு மாறாக தொடருந்து நிலைய அதிபர்கள் செயற்பட்டமையால், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2 வருடங்களாக நிலவிய இந்த முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை.
குறித்த பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதிகள் தொடருந்து நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Related posts:
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை மாணவன்!
சுயலாப கொள்ளையர்களால் எமது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர...
தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை கொள்வனவு செய்ய தேர்தல்கள் ஆணைக்க...
|
|
|


