உருளைக்கிழங்கின் விற்பனை விலை வீழ்ச்சி!
Saturday, December 28th, 2019
உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டமையை அடுத்து அதன் மொத்த விற்பனை விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன்படி உருளைக்கிழங்கு ஒரு கிலோ 110 ரூபாவாக இன்று விற்பனை செய்யப்பட்டது. இந்த தகவலை அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
உள்ளூரில் ஏற்பட்ட பாரிய விலையேற்றத்தை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டது.
இதேவேளை இலங்கைக்கு பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து மாதம் ஒன்றுக்கு 15000 முதல் 20000 தொன் வரை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல் !
பேச்சுவார்த்தை நடத்த சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை புலம்பெயர் சமூகத்தினர் நடத்திய விதம் கவலைய...
பண்டிகை காலத்தை முன்னிட்டு மீண்டும் பயணத்தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் தீவிர ஆலோசனை!
|
|
|


