உடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்!

Tuesday, June 4th, 2019


தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 24 மணித்தியாலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு பதிலளிக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதியிடம் பேசும் போது ஹிஸ்புல்லா இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts: