இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Saturday, September 14th, 2019


அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியினால் வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 7 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 225 ரூபா 69 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 201 ரூபா 81 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 184 ரூபா 55 சதம்கனடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 139 ரூபா 16 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 44 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 40 சதம்.

Related posts: