ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்கு இலங்கைக்கு மேலதிகமாக கோட்டா!

இவ்வருடம் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்கு இலங்கைக்கு மேலதிகமாக 600 கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி 2800 பேரிற்கு இம்முறை ஹஜ் கடமை செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
குறித்த இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு உலக நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கான மக்கள் சவூதி அரேபியாவிற்கு செல்கின்றனர். எனினும் கடந்த காலங்களி்ல மக்கா நகரின் கஃபதுல்லாஹ்வில் புனர் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தைமயினால் இலங்கைக்கான ஹஜ் கோட்டா மட்டுப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானது - இராஜாங்க அமைச்சர் செஹான் சேம...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு பயணம் – மத்திய கிழக்கின் பதற்றநிலை மேலும் அதிகரிப்பு!
|
|