வைத்தியர் பாலித மஹிபால உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலய நாடுகளுக்கான தொற்றா நோய் சுற்றுச்சூழல் மற்றும் இடம்பெயர்வு சுகாதார சர்வதேச ஒருங்கிணைப்பாளராக பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகரில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்திற்கான அலுவலகத்தில் வைத்து அவர் தனது பதவியை பொறுப்பேற்க உள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதற்கினங்க குறித்த வலயத்தில் உள்ள 11 நாடுகளின் பிரதானியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால பணியாற்றிவுள்ளார்.சுகாதாரத் துறையில் இவ்வாறான பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது நபராக பாலித கருதப்படுகின்றார்.
மேலும் 2011 ஆம் ஆண்டு சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாலித ,சுகாதார சேவையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மாலிங்க வழங்கிய பணத்தில் மோசடி!
இராணுவத்தில் 10 புதிய மேஜர் ஜெனரல்கள்!
நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமைய...
|
|