வைத்தியர்களிடம் கோரிக்கை!

Friday, May 20th, 2016

நாட்டிலேற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவது தற்போதுள்ள அத்தியாவசிய தேவையாக உள்ளதால் வைத்தியர்கள் இக்காலப்பகுதியில் விடுமுறை பெறுவதையோ அல்லது விடுமுறையை நீடிப்பதையோ தவிர்த்து கொள்ளவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரச வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அண்மையில் வாழும் வைத்தியர்கள் தற்போது விடுமுறை பெற்றிருப்பார்களாயின் அவர்களை உடனடியாக மீள பணிக்கு திரும்புமாறும் அச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவ்வமைப்பின ஊடக பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்க்க இளம் தொழில் நிபுணர்களிடமிருந்து ஜனாதிபதியிடம் மு...
வகுப்பறையில் விரோதம்’ - சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி - நாராம்மல பகுதி பாடசாலையில் ...
சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!