வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை!

Wednesday, August 9th, 2017

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக மாவட்ட அடிப்படையில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த விண்ணப்பப் படிவங்களை 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்டவர்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, முதலாம் மாடி, மிலோதா, பழைய ரைம்ஸ் கட்டிடம், பிறிஸ்டல் வீதி, கொழும்பு 01. மேலதிக விபரங்களை http://mnpea.gov.lk/   அமைச்சின் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

Related posts:

யானை வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணியின் திட்டத்தை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்ப...
நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் - அம...
பொருளாதார நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் கல்வி முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது...