நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய வர்த்தகர்களிடமிருந்து 1,43,500ரூபா அறவீடு!

Thursday, January 12th, 2017

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தை மீறிய வர்த்தகர்கள் 25 பேருக்கு 1இலட்சத்து 43ஆயிரத்து 500ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நிலவையில் இருந்த 8 வழக்குகளும் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகளில் 17 வழக்குகளுக்குமாக சேர்த்து 25 வழக்குகளுக்கே நேற்றுமுன்தினம் அபராதம் விதித்தார் யாழ்.மேலதிக நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி, கலாவதியான மென்பானம், பெயின்ட், சம்போ, பவுடர், பிஸ்கட், பேபி கிறீம் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 13பேருக்கு தலா 5,000ரூபாவும் காலாவதியான பால் பணியாரம், கேக் என்பவற்றை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு தலா 6,000ரூபாவும் அதேபோல் காலாவதியான கிறீம் சோடா மற்றும் தலைப்பூச்சுமை என்பனவற்றை விற்பனை செய்த இருவருக்கு தலா 7,000ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைவிட 2016ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த 8 வழக்குகளுக்கு 52ஆயிரத்து 500ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதில் காலாவதியான அழகு சாதனப் பொருட்களை வைத்திருந்த பியூட்டி பார்லர், காலாவதியான பிஸ்கட், சம்போ மென்பானம் என்பவற்றை விற்பனை செய்த நால்வருக்கு தலா 8,000ரூபாவும் பார்மசி ஒன்றுக்கு 7,500ரூபாவும் நிகர எடையினைவிட 54கிராம் குறைவான பாண் உற்பத்தி செய்த வெதுப்பகம் ஒன்றுக்கு 4,000ரூபாவும் அதேபோல் காலாவதியான பவுடர், மென்பானம் விற்பனை செய்த இருவருக்கு 4,000 மற்றும் 5,000 ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது. குறித்த வழக்குகள் யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

77283976Untitled-1

Related posts: