வேகமாக பரவி வரும் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் – விவகாரத்தைக் கையாள தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, December 26th, 2023
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் புதிய கொரோனாத் திரிபு விவகாரத்தைக் கையாள சுகாதார அமைச்சு தயாராக உள்ளதாக மருத்துவ நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனை உட்பட 19 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவை தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, புதிய கொரோனாத் திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளபோதிலும், அது தொடர்பான மரபணுப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதாரத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் முறைப்பாடுகள்!
தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்றவர்களே காரண...
13 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலையின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!
|
|
|


