நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் முறைப்பாடுகள்!
Friday, August 30th, 2019
பொதுமக்களின் முறைப்பாடுகளை நாடாளுமன்றத்திற்கு நேரடியாக ஒன்லைன் (Online) மூலமாக முன்வைக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புதிய சட்ட ஒழுங்குக்கு அமைவாக பொதுமக்கள் Online மூலம் தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துடன் மக்கள் இணைந்து செயற்படுவதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற செயற்குழுவை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் தனிப்பட்ட முறைப்பாடுகளையும், கருத்துக்களையும் முன்வைப்பதற்கான இணையத்தள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
Related posts:
சகல முன்பள்ளிகளுக்கும் நாளைமுதல் விடுமுறை - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்பக் க...
சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
பொன்.சிவகுமாரனின் 48 ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!
|
|
|


