அரச சேவைகள் வினைத்திறனாக இருக்கவேண்டும் – ஜனாதிபதி!

Saturday, March 30th, 2019

நாடு எதிர்கொள்ளும் சாவல்களை வெற்றி கொள்வதற்கு அரச சேவையில் முக்கிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதற்காக புதிய தொலைநோக்குடன் புதிய திட்டங்களை வகுக்க வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமானதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு நாட்டின் நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை, கணக்காய்வு சேவை உள்ளிட்ட அரச சேவையின் உயர் துறைகள் முன்னணி வகிக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நிலைமைகளிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல்வாதிகளால் மட்டும் முடியாது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது 30 வீதமாகவுள்ள நாட்டின் அரச ஊழியர்களின் வினைத்திறனை குறைந்தது 50 வீதமாகவாவது அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு இல்லாதபோது நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்லும் பயணத்தை வெற்றிகொள்ள முடியாதென்றும் குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளுக்கும் அவற்றின் கீர்த்தியையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், அனைத்து துறைகளினதும் தொழில்சார்ந்த கோரிக்கைகளை முடியுமானளவு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts: