மீண்டும்  எரிபொருள் விலை அதிகரிப்பு? –  அமைச்சர் மங்கள!

Friday, September 28th, 2018

புதிய எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரும் என்றும், அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது-

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகளவு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பா மசகு எண்ணெய் 80 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் இருக்கும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்தால் ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை 100 டொலரையும் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.- என்றார்.

Related posts:

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது ...
யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து - 23 பேருக்கு காயங்களுடன் கிளிசொச்சி வ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...