வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்!

Sunday, January 13th, 2019

அண்மையில் வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பமாகவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன. புதிய உதாகம்மான வேலைத் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹரவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சோபித நாஹிமிகம வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

20 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் நீர் மின்சாரம் உட்கட்டமைப்பு போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்திருந்தார்.

மேலும், ஹம்பாந்தோட்ட அங்குனுகொலபெலஸ சூரியபொக்குணவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமையும் குறறிப்பிடத்தக்கது

Related posts: