வெள்ளப்பாதிப்பை எதிர் கொள்வதற்கு முன்னாயத்த சந்திப்பு – நிலமைகளை ஆராய கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

Saturday, December 16th, 2023

இம் முறை பெய்து வரும் கடும்மழையை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பின் நிலமைகளை  எதிர் கொள்வதற்கான முன்னாயத்த சந்திப்பு நேற்று (15) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற இச் சந்திப்பை  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

வெள்ளப்பாதிப்புடன் தொடர்புபடும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்ட இச் சந்திப்பில் பிரதானமாக இரணைமடு குளத்தின் பாதுகாப்பு க்காக வெளியேற்றப்படும் நீரின் நிலமைகள் கூடுதலாக மேலும் மழை அதிகரித்தால்  திறந்து விடப்படும் நீரினால் பாதிக்கபடும் கிராமங்கள் மற்றும் பயிர் செய் நிலங்களின் நிலமைகள், அதற்காக கவனம் செலுத்த வேண்டிய முன்னேற்பாடுகள் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன.

இக் குளத்துடன் தொடர்பு பட்டு தற்சமயம் மக்கள் இடம் பெயரும் நிலைமையில் உள்ள பகுதிகள் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்களுக்கான சமைத்த உணவை வழங்க வேண்டி இருப்பின் அதற்கான முன்னேற்பாடுகளில் தொடர்பு படும் துறைசார் திணைக்களங்க ளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெளிவாக எடுத்துக் கூறினார்.

பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் அமைக்கப்பட்ட பாலங்கள் உரிய முறையில் அமைக்கப்படாமையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில் எழுந்துள்ள பிரச்சினைகளும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.

இதில் தொடர்புபடும் திணைக்களங்கள் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களை அரச அதிபர் துறைசார் அதிகாரிகளிடம் தனித்தனியாக வினவி அறிந்து கொண்டதுடன் அவசியம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக் கான அறிவுறுத்தல்களையும்  அவர் கவனம் செலுத்தியிருந்தார்.

வெள்ளப்பாதிப்பின் நிலமைகள்  மேலும்  அதிகரித்தால் அரச சார்பற்ற நிறுவனங்கள்,  பாதுகாப்பு தரப்பினர் மற்றும் தொடர்புபடும் அரச திணைக்களங் களின் பங்களிப்பின் அவசியத்தை அனர்த்த முகாமைத்துவ பிரிவு இச் சந்திப்பில்  வலியுறுத்தி இருந்தது.

இரு தினங்கள் முன்னதாக பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட பாதிப்புகளை கவனம் செலுத்தவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர், வடக்கின் மாவட்டங்களது ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் அரச அதிபர்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுடன் இணையவழி கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இச் சந்திப்பில் கரைச்சி, கண்டாவளை மற்றும் பச்சிலை பள்ளி பிரதேச செயலர்களும்  தமது பகுதி பாதிப்புக்குள்ளான இடங்களில்  முன்னெடுக்க வேண்டிய பணிகளை ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: