ஐந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை – பாவனையாளர் அதிகார சபை!
Sunday, January 29th, 2017
5 பொருட்களுக்கான உச்சபட்ச சில்லறை விலைகளை பாவனையாளர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. பருப்பு, சீனி, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கே உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (27) முதல் அமுலாகும் வகையில் பின்வருமாறு என உச்சபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைசூர் பருப்பு ரூபா 159 (கிலோ)
வெள்ளை சீனி ரூபா 93 (கிலோ)
பாசிப் பயறு ரூபா 205 (கிலோ)
நெத்தலி ரூபா 405 (கிலோ) – துபாய்
– நெத்தலி ரூபா 490 (கிலோ) – தாய்லாந்து
உருளைக் கிழங்கு ரூபா 115 (கிலோ)

Related posts:
விமான நிலையத்தில் பாரிய மோசடி!
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 508 வாக்களிப்பு நிலையங்கள் - சுகாதார ஏற்பாடுகளும் சிறப்பாக ஏற்பாடு!
இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு - பொத...
|
|
|


