வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, September 26th, 2022

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதிய வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 18வயதிற்கும் 59வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு ‘மனுஷம்’ என்ற பெயரில் புதிய ஓய்வூதியதிட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்ளடங்குவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் உயிரிழக்கின்றனர் - பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு!
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் – வருகின்ற...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ய...

நாட்டில் வருடாந்தம் 19 சதவீத மரக்கறிகளும், 21 சதவீத பழங்களும் வீண் விரயமாகின்றன - விவசாய அமைச்சு வெள...
பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை 'வலுவான அர்ப்பணிப்பை' காட்டி வருகின்றது - சர்வதே...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் நட்டம் - ...