இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் நட்டம் – விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தகவல்!

Friday, October 27th, 2023

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்தம் சுமார் 1500 இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாகின்றன என அதன் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் –

இலங்கையில் இலங்கை போக்குவரத்து பேருந்து விபத்துக்களில் சிக்குண்டு 60 முதல் 70 வரையிலானவர்கள் உயிரிழப்பதாக அண்மைய அறிக்கையில் பதிவாகியுள்ளதாக அவர் சட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்துகளை மீள இயக்குவதற்கு ஏற்ற கால அவகாசம் அதிகம் என்பதால், அதன் போது ஏற்படும் வருமானத்தை கணக்கில் கொண்டால் வருடாந்தம் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், சாரதிகளுக்கு பாதுகாப்பான சாரதி நுட்பங்களுடன் கூடிய பயிற்சி வகுப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரையில் 300 ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மேல் மாகாணத்தில் வீதி விபத்துக்கள் சுமார் 25 விகிதம் குறைந்துள்ளதாக எரந்த பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுங்கள் - அனைத்து உபவேந்தர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்க...
இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் - சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்...
ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் - பி...