வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Friday, November 26th, 2021

அரசாங்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இயற்கை எரிவாயு நிறுவனமொன்றை அமைக்கவுள்ளதாகவும், இது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் எனவும் எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நிறுவனம் இயற்கை எரிவாயு இருப்புக்களை உருவாக்கவும், குழாய்களை அமைக்கவும், எரிபொருளை போக்குவரத்திற்கு விநியோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் எரிவாயு ஆய்வுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டாண்மை நிறுவனத்தில் அரசாங்கம் பங்காளியாக செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை நாட்டுக்கு வழங்குவதாகவும், நிர்வாகத்தில் இலங்கை அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த தசாப்தத்தில், இலங்கை சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு சேர வேண்டிய அவசியமில்லை என்றும், எரிவாயுவை சுயமாக ஆராயவும், வெளிநாட்டு திட்டங்களிலும் ஈடுபடவும் இதன் மூலம் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2007 இலக்கம் 7 “தேசிய பெற்றோலியம் மற்றும் எரிவாயு நிறுவனத்தை” நிறுவுவதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோர தேவையில்லை - ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக...
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப...
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் - தகவல்...