புலம்பெயர் புலிகளின் உறுப்பினர்களே இலங்கை மீது விசாரணை கோருகின்றனர் – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021

வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி – 8 மாநாடு தொடர்பில் இன்று நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன.

அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதேஷ் பின்பற்றுகின்றது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து தமிழர்களுக்கு ஒரு சுயாதீன நிலத்துக்காகப் போராடிய, போர்க்குணம் மிக்க, பிரிவினைவாத குழுவே தமிழீழ விடுதலைப் புலிகள்.

விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்ற இராணுவம் மற்றும் கடற்படைகளைக் கொண்டிருந்தது. அவ்வாறாயின் அது ஒரு போராட்டக் குழு. விடுதலைப் புலிகளின் அதிகமான உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.

இப்போது, இதுபோன்ற விசாரணைகளுக்கான கோரிக்கைகளையும் அவர்களே முன்வைத்து வருகின்றனர் என்றும் அவர் மேலும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: