600 இலங்கையர்களை பலியெடுத்த கத்தார் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் – 439 பேருக்கு நட்டஈடு வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Sunday, November 27th, 2022

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள்’ வெளியாகியுள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் ஈடுபட்ட இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதேசமயம் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, கத்தாரில் 6,500 கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்துக்களில் இறந்துள்ளதாக ஆசிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் 2014ஆம் ஆண்டிலேயே இலங்கையர்களின் அதிக எண்ணிக்கையான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மொத்த இலங்கை நபர்களில் 439 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நட்டஈடு வழங்கியுள்ளது.

இழப்பீடு வழங்கப்பட்ட 439 பேரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளதாக அதன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர், பதிவு செய்யாமல் வெளிநாட்டில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும், 12 ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ...
சுற்றுச்சூழல்களில் வீசப்படும் முகக் கவசம், கையுறைகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட ...
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் - சுகாதார அமைச்சு தெரிவிப்...