நிர்வாக சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Sunday, November 27th, 2016
நிர்வாக சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று 7வது நாளாக பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் முகாமைத்துவம், வீடமைப்பு, கட்டிட நிர்மாணத்துறை ஆகிய அமைச்சுக்களுக்காக நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றினார்.

கடந்த வருடத்திலும் இந்த வருடத்திலும் 248 வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாக சேவையில் அடுத்த வருடத்தில் 251 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். முகாமைத்துவ சேவைக்காக 2500 பேரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

நூல்நிலைய சேவை, தகவல் தொழில்நுட்பம், கணக்காய்வு சேவை ஆகியவற்றுக்கும் புதிதாக உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். அரச சேவைக்காக கொழும்பு, கம்பஹா மற்றும் மொனராகலயில் உத்தியோகபூர்வ வீடுகள் அமைக்கப்பட உள்ளன. கண்டி, பள்ளேகல பிரதேசத்தில் அரச ஊழியர்களுக்காக வீடமைப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

வீடுகளை அமைப்பதற்காக 150 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேவா பியச என்ற திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட உள்ளன. அக்ரஹார காப்புறதியை ஆயுள் காப்புறதியாக நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் சிறப்பான முறையில் பணிகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் வரலாற்றில் அரந ஊழியர்களுக்கு ஆகக்கூடிய சம்பளத்தை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.அரச சேவையை தரமான வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் நிமல் லான்ஷா உரையாற்றுகையில், 2012ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 80 சதவீதமானவை பூர்த்திச. செய்யப்பட்டுள்ளன.

e0fd612d5d34c516baa0d2b76f480404_XL

Related posts: