அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது – ரிஷாத்!

Monday, December 19th, 2016

எச்சந்தர்ப்பத்திலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்வதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது உரையாற்றிய அமைச்சர்;

பண்டிகை காலத்தில் நுகர்வோர் சேவை அதிகார சபையின் சட்டங்களை மீறும் வர்த்தகர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அவ்வாறான வர்த்தகர்களை கைது செய்வதற்கு நுகர்வோர் சேவை அதிகார சபையினால் விஷேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

rishad

Related posts: