வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது!

இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமான முறையில் மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கதிகாரிகள் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வடக்கின் பல பாகங்களிலும் மின்தடை!
திட்டமிட்டபடி பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்...
|
|