வடக்கின் பல பாகங்களிலும் மின்தடை!

Wednesday, November 22nd, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்இன்று புதன்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தில் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம்,கட்டைக்காடு, கேவில், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை- 05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக் குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts:


கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை - உள்நாட்டு மருத்துவ ஊக்குவி...
50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!
சவுதி நிதியத்தால் கிடைத்துவந்த பணம் மட்டுமே தொடர்ந்தும் கிடைத்து வருகிறது - அமைச்சர் பந்துல குணவர்த்...