வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 1,000 ரியால் – சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021

கட்டாரில் பணியாற்றும் சகல ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கைக்கான கட்டார் தூதுவராலயமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்த முதலாவது மத்திய கிழக்கு நாடாக கட்டார் திகழ்கிறது.

இந்த சம்பள முறைமை கட்டாரில் பணியாற்றும் சகல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் உரித்தாகும். நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பணியாற்றுபவர்களும் இந்த சம்பளக் கட்டமைப்பில் உள்வாங்கப்படுவார்கள்.

இதேவேளை, குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரம் ரியால் வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த வசதிகளை வழங்காதுவிடத்து அதற்காக மேலதிக கொடுப்பனவுகளை ஒதுக்க வேண்டும் என்றும் சர்வதேச தொழில் அமைப்பின் கட்டாருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழ்.பல்கலைக்கழக பிசிஆர் பரிசோதனை தொடர்பில் வதந்தி பரப்பியோரைக் கண்டறியுமாறு குற்றவியல் பிரிவில் பேர...
சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எவ்வித அரசியல் தலையீட்டுக்கும் இடமில்லை – அரசாங்கம் உறுதி!