வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் : ஆனால் தகுதியானவர்கள் இல்லை! – அமைச்சர் தலதா அதுகோரள!

வெளிநாட்டில் வேலை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அமெரிக்காவில் 5000 தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது எனவும் இந்த தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் என மூன்று பேர் மட்டுமே தெரிவாகியிருந்தனர்.80 பேர் நேர்முகத் தேர்விற்கு தெரிவான போதிலும் எழுத்துப் பரீட்சையில் 3 பேர் மட்டுமே தேர்வாகினர் என்று குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதனை விடவும் அதற்கு தகுதியானவர்களை தேடிப்பிடிப்பதில் சவால்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
பெண்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய - விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி !
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஐந்து வேலைத்திட்டங்கள்...
அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தலைவ...
|
|