பெண்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய – விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி !

Thursday, February 8th, 2018

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு புற்று நோய் சம்மந்தமாக இளம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் பேரணி இடம்பெற்றுள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய பிரிவினால் நடாத்தப்பட்ட இப் பேரணியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தொண்டர்கள் உட்பட இளம் பெண்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் அதிகமான பெண்கள் குறிப்பாக 35 வயதிற்கு உட்படப்ட பெண்கள் மார்புப் புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்

இந் நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை செய்வதன் மூலம் குணப்படத்த முடியும் இது சம்மந்தமாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ் மாவட்;டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தோறும் பேரணி நடைபெறவுள்ளது இந்த வகையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த திங்கட்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து காலை 8மணிக்கு ஆரம்பமான பேரணி பகல்12 மணியளவில் சுன்னாகம் பட்டினத்தை சென்றடைந்தது மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பெப்ரவரி மாதம் முடியும் வரை உலகப் புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Related posts:


உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் வவுனியாவில் ஆராய்வு - காப்புறுதி திட்டம் நடைமுறைப்படு...
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததால் சேவை பெறுநர் பெரும...
அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு கா...