நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததால் சேவை பெறுநர் பெரும் பாதிப்பு!

Tuesday, December 12th, 2023

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றையதினமும் தொடரும் நிலையில் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது

நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாடு தளுவய ரீதியில் இரண்டாவது நாளாக தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்வதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்ததால் தபால் நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதை காண முடிந்தது.

அத்துடன 2024 ஜனவரி மாதம்முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தபால் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: