அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, December 28th, 2023

தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே இம்முறை டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் யாழ் மாவட்டப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கேதேஸ்வரன் சுடிக்காட்டியுள்ளார்.

இதே நேரம் டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தில் பிரதேச செயலர்கள் பொதுமக்கள் போன்ற தரப்பினரிடமுருந்து முழுமைதான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கவலை வெளியிட்டார்

இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் என்பது குப்பைகளை அகற்றுவது மாத்திரமல்ல கைவிடப்பட்ட காணிகளில் உள்ள நுளம்புகள் பெருகும் இடங்களையும் துப்புரவு செய்ய வேண்டும் இந்த கைவிடப்பட்ட காணிகள் விடயத்தில் பிரதேச செயலர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தான் உண்மை.

நீண்ட காலமாக இந்த விடயத்தினை தெரியப்படுத்தியும் பிரதேச செயலர்கள் கைவிடப்பட்ட காணிவிடயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது எனவே இது எந்த அளவுக்கு டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி எனவும் தெரிவித்தார்,

இன்நிலையில்.வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா  இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான விடயங்களை சுட்டிக்கட்டியிருந்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட மற்றும் வெற்று காணிகளில் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பாக நான் கொக்குவில் பகுதியில் வசித்து வருகின்றேன். கொக்குவில் பகுதியில் அதிகளவில் குப்பை காணப்படுகின்றது வீதிகளில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இம்முறை சிறிய நீர் உள்ள இடங்களிலும் டெங்கு நுளம்பு பெருகும் நிலை காணப்படுகின்றது கடந்த இரண்டு மாதங்களிலேயே தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாக்கத்துக்குள்ளாகும் நோயாளியை சீராக கண்காணித்து வந்தால் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம். ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதால் கண்காணிப்பதில் சற்று பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால் மரண வீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு தொற்றால் நால்வர் பலியாகியுள்ளனர்  இதேநேரம் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் நான்கு பிரதேச வைத்துயசாலையிலும்

இதற்கான சிகிச்சை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதேநேரம் விசேட விழிப்பூட்டல்,  மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டள்ளதுடன் அதனை கண்காணிப்பதற்காக 60 வைத்திய மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை டெங்குனுதவியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனை நிவர்திசெய்ய பணியாளர்களாக பயிற்சிபெற்ற 53 பேரையும் நிரந்தரமாக்குவதனூடாக ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் பிராந்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேநேரம் 150 நாளாந்தம் வரையானவர்கள் சிகிச்சைக்காக வரகின்ற நிலையில் நேற்று 84 பேர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாதம் ஆயிரத்து 284 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவித்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி டெங்குவை காவும் நுளம்புகள் வீரியம் மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வ சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போதனா வைத்தியசாலையில் அதிகாளவான நோயாளர்கள் இருப்பதால் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் அதிகளவாக அக்கறியுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலததிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தற்பொது பரவியுள்ள டெங்கு தொற்றானது மூன்றாவது வகை நுளம்பின் மூலமே பரவுவதாகவும் இது  இம்முறையே யாழ்ப்பாணத்தில் பரவியுள்ளதால்  மக்கள்.மத்தியில் இதற்கான தற்காப்பு வளங்கள் இல்லாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: