வெளிநாடுகளில் இருக்கும் 17 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு!
Sunday, March 29th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்தவேண்டுகோளை அடுத்து இதுவரை 17 ஆயிரம் பேர் தம்மை பதிவுசெய்து கொண்டனர்.
இதில் 6773 பேர் மத்திய கிழக்கில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்து 1892 பேரும், தென்னாசியாவில் இருந்த 1028 பேரும், வட அமெரிக்க மற்றும் ஏனைய நாடுகளில் இருந்த 6000 பேரும் தன்மை பதிவு செய்துகொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தரவுகளை கொண்டு எதிர்காலத்தில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Related posts:
இலங்கை - சுவிஸ்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசப...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ...
|
|
|


