வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!

Wednesday, November 18th, 2020

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அதே நேரம் நேற்று இரவு துபாயிலிருந்து 55 பேர் கட்டு நாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்தனர் .

இதைத் தவிர மாலைதீவிலிருந்து 29 பேர் , இந்தியாவிலிருந்து 7 பேர் மற்றும் கட்டாரிலிருந்து ஒருவர் ஆகியோர் நேற்று நள்ளிரவு கட்டு நாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்தனர் .

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப் படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது

Related posts:

கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு உறுதியான பதில் கிடைக்காவிடின் போராட்டம் - தனியார் பா...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவ...
வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு...