வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிப்பு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு, மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, டொலர் ஒன்றுக்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத காலப்பகுதியில், இதுவரையிலும் வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே, அமெரிக்க டொலர் ஒன்றிற்கு 10 ரூபா என்ற மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் - காலநிலை அவதான நிலையம்!
தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர் கவனத்திற்கு!
சமுர்த்தி உத்தியோத்தர்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் - உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்கற்று நடவடிக்கை ...
|
|