கிளிநொச்சியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – மாணவர்கள் 10 பேர் உட்பட நேற்று 20 பேருக்கு தொற்றுறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Tuesday, November 2nd, 2021

நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் எனவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றுமுற்பகல் இடம்பெற்ற கொவிட் பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்களிற்கான மூன்றாம்கட்ட மாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சைனாபோம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். எனவே எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களிற்கான 3ம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

ஆகவே, 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் பின்னடிக்காமல் தற்பொழுது வழங்கப்படும் சைனாபோம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும். அவர்களிற்கும் எதிர்காலத்தில் 6மாதம் முடியும் காலத்தில் பைசர் தடுப்பூசி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்க சந்தர்ப்பம் உள்ளது.

ஆகவே, பைசர்தான் வேண்டும் என்று இருக்காமல் கிடைக்கின்ற ஊசியை பெற்று பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு 6 மாத நிறைவில் பைசர் ஊசியை பெற்றுக்கொள்ளங்ள முடியும். அதேவேளை தற்பொழுது நோய் நிலை குறைந்துள்ள நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனெனில், எதிர்காலம் எப்படியாக அமையும் என்று உறுதியாக கூற முடியாது. தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட நாடுகளில் மீண்டும் நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இந்த இடைவெளியை பாவித்து அனைவரும் முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இவ்வூசியை போடாதவர்கள் போட்டுக்கொள்வது அவசியம்.

இதேவேளை சிறு பிள்ளைகளிற்கன பாடசாலை ஆர்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இந்த நோய் பரவல் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காணப்படுகின்றது. ஆகவே, சுகாதார முறைகளை பின்பற்றி பாடசாலைகள் நடைபெற வே்ணடும. அதேவேளை, பாடசாலைகளிற்கு காய்ச்சல், தடிமன் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களைின் நோய் நிலையை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம். இதில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: